ஸ்ரீ:
வேங்கடநாதனென்னும் வேதாந்த தேசிகர் அருளிச்செய்த
தேசிகப் ப்ரபந்தம்
அடைக்கலப் பத்து
சீரார் து}ப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய ©ஷணம்
ஸ்ரீமத்வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்
சீரொன்று து}ப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்னச் சொன்ன பழமொழியுள் - ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வாhர்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு.
ழூ பக்திமுதலாமவற்றில் பதியெனக்குக் கூடாமல்
எத்திசையுமிழன்றோடி இளைத்துவிழும் காகம்போல்
முத்திதரு நகரேழில் முக்கியமாங்கச்சிதன்னில்
அத்திகிரி அருளாளர்க்கு அடைக்கலம்நான் புகுந்தேனே.
சடைமுடியன் சதுமுகனென்று இவர்முதலாந் தரமெல்லாம்
அடையவினைப்பயனாகி அழிந்துவிடும்படிகண்டு
கடிமலராள் பிரியாத கச்சிநகர் அத்திகிரி.
இடைமுடையவருளாளர் இணையடிகளடைந்தேனே.
தந்திரங்கள் வேறின்றித் தமதுவழியழியாது
மந்திரங்கள் தம்மாலும் மற்றுமுள்ள உரையாலும்
அந்தரங்கண்டடிபணிவார் அனைவர்க்கும் அருள்புரியும்
சிந்துரவெற்பிறையவனார் சீலமலதறியேனே.
காகமிராக்கதன் மன்னர் காதலி கத்திரபந்து
நாகமரனயன் முதலா நாகநகரார்தமக்கும்
போகமுயர் வீடுபெறப் பொன்னருள் செய்தமை கண்டு
நாகமலை நாயகனார் நல்லடிப்போதடைந்தேனே.
உவக்கும் அவைஉகந்து உகவாஅனைத்தும் ஒழிந்து
உறவுகுணம் மிகத்துணிவுபெற உணர்ந்து வியன்காவலெனவரித்துச்
சகத்தில் ஒரு புகலில்லாத் தவமறியேன் மதிட்கச்சி
நகர்க்கருணை நாதனை நல்லடைக்கலமாய் அடைந்தேனே.
அளவுடையார் அடைந்தார்க்கும் அதனுரையேகொண்டவர்க்கும்
வளவுரை தந்தவனருளே மன்னியமாதவத்தோர்க்கும்
களவொழிவாரெமரென்ன இசைந்தவர்க்கும் காவலராம்
துளவமுடியருள்வரதர் துவக்கிலெனை வைத்தேனே.
உமதடிகள் அடைகின்றேனென்று ஒருகாலுரைத்தவரை
அமையுமினி என்பவர்போல் அஞ்சலெனக் கரம்வைத்து
தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியுந்தான் மிகவிளங்கும்
அமைவுடைய அருளாளர் அடியிணையை அடைந்தேனே.
திண்மைகுறையாமைக்கும் நிறைகைக்கும் தீவினையால்
உண்மைமறவாமைக்கும் உளமதியிலுகைக்கும்
தண்மைகழியாமைக்கும் தரிக்கைக்கும் தணிகைக்கும்
வண்மையுடையருளாளர் வாசகங்கள் மறவேனே.
சுருதிநினைவிவையரியும் துணிவுடையார் து}மொழிகள்
பரிதிமதியாசிரியர் பாசுரஞ்சேர்தருக்கணங்கள்
கருதியொருதெளிவாளால் கலக்கமறுத்தத்திகிரிப்
பரிதிமதிநயனமுடைப் பரமனடி பணிந்தேனே.
ழூதிருமகளும் திருவடிவும் திருவருளும் தௌ;ளறிவும்
அருமையிலாமையுமுறவும் அளப்பரிய வடியரசும்
கருமழிப்பளிப்பமைப்பும் கலக்கமிலா வகைநின்ற
அருள்வரதர் நிலையிலக்கில் அம்பென நானமிழ்ந்தேனே.
ழூஆறுபயன் வேறில்லா அடியவர்கள் அனைவர்க்கும்
ஆறுமதன் பயனுமிவை ஒருகாலும் பலகாலும்
ஆறுபயனெனவேகண்டு அருளாளரடியிணைமேல்
கூறிய நற்குணவுரைகள் இவைபத்துங் கோதிலவே.
அடிவரவு:- பக்தி, சடை, தந்தி;, காகம், உகக்கும்,
அளவு, உமதடி, திண்மை, சுருதி, திருமகள், ஆறுபயன்.
அதிகார சங்கிரகம்
ழூபொய்கைமுனி ©தத்தார் பேயாழ்வார்
தண்பொருநல்வரும் குருகேசன் விட்டுசித்தன்
துய்ய குலசேகரன் நம்பாணநாதன்
தொண்டரடிப்பொடி மழிசைவந்தசோதி
வையமெலாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்துபாடும்
செய்யதமிழ் மாலைகள் நாம்தெளியவோதித்
தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே. 1
இன்பத்தில் இறைஞ்சுதலில் இசையும்பேற்றில்
இகழாத பல்லுறவில் இராகம் மாற்றில்
தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில்
அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க
அருமறைகள் தமிழ்செய்தான் தாளே கொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக்காட்டும்
தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே 2
ழூஎன்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கு
யானடைவே அவர்குருக்கள் நிரைவணங்கிப்
பின்னருளால் பெரும்©து}ர் வந்தவள்ளல்
பெரியநம்பி ஆளவந்தார் மணக்கால் நம்;பி
நன்னெறியை அவாக்குரைத்த உய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத் திருமகள் என்றிவரை முன்னிட்டு
எம்பெருமான் திருவடிகள் அடைகின்றேனே. 3
ஆரண நு}ல்வழிச் செவ்வை அழித்திடுமைதுகர்க்கு
ஓர் வாரணமாய் அவர் வாதக்கலிகள் மாய்த்தபிரான்
ஏரணிகீர்த்தி இராமாநுசமுனி இன்னுரைசேர்
சீரணிசிந்தையினோம் சிந்தியோமினித் தீவினையே 4
நீளவந்து இன்று விதிவகையால் நினைவொன்றியநாம்
மீளவந்து இன்னும் வினையுடம்பொன்றில் விழுந்துழலாது
ஆளவந்தாரெனவென்றருள்தந்து விளங்கியசீர்
ஆளவந்தாரடியோம் படியோமினி அல்வழக்கே. 5
காளம்வலம்புரியன்ன நற்காதல்அடியவாக்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை இன்னிசை தந்தவள்ளல்
மூளுந்தவநெறிமூட்டிய நாதமுனி கழலே
நாளுந்தொழுதெழுவோம் நமக்கார் நிகர் நாநிலத்தே. 6
ழூஆளுமடைக்கலம் என்றெம்மை அம்புயத்தாள் கணவன்
தாளிணைசேர்ந்து எமக்கும் அவைதந்த தகவுடையார்
மூளும்மிருட்கள்விள முயன்றோதிய மூன்றினுள்ளும்
நாளுமுகக்கவிங்கே நமக்கோர்விதி வாய்க்கின்றதே 7
ழூதிருவுடன் வந்தசெழுமணிபோல் திருமாலிதயம்-
மருவிடமென்ன மலரடிசூடும் வகைபெறுநாம்
கருவுடன் வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடன் ஐற்தறிவார் அருள்செய்ய அமைந்தனரே. 8
அமையாவிவையென்னும் ஆசையினால் அறுமூன்றுலகில்
சுமையான கல்விகள் சூழவந்தாலும் தொகையிவையென்று
இமையாவிமையவரேத்திய எட்டிரண்டெண்யிய
நம்சமயாசிரியர் சதிர்க்குந் தனிநிலை தந்தனரே. 9
நிலைதந்த தாரகனாய் நியமிக்குமிறைவனுமாய்
இலதொன்றெனாவகை எல்லாந் தனதெனுமெந்தையுமாய்த்
துலையொன்றிலையெனநின்ற துழாய்முடியானுடம்பாய்
விலையின்றி நாமடியோமெனும்வேதியர்மெய்ப்பொருளே 10
பொருளொன்றெனநின்ற ©மகள்நாதன் அவனடிசேர்ந்து
அருளொன்றுமன்பன் அவன்கொளுபாயமைந்தபயன்
மருளொன்றியவினை வல்விலங்கென்று இவையைந்தறிவார்
இருளொன்றிலாவகை எம்மனந் தேறவியம்பினரே. 11
தேறவியம்பினர் சித்தும் அசித்தும் இறையுமென
வேறுபடும் வியன் தத்துவம் மூன்றும் வியனுடம்பிற்
கூறுபங்கொடுமோகமும் தானிறையாங்குறிப்பும்
மாறநினைத்தருளால் மறைநு}ல் தந்த வாதியரே. 12
வாதியர் மன்னுந்தருக்கச் செருக்கின் மறைகுலையச்
சாதுசனங்கள் அடங்கநடுங்கத் தனித்தனியே
ஆதியெனாவகை ஆரணதேசிகர் சாற்றினர் நம்போதமரும்
திருமாலுடன் நின்ற புராணனையே. 13
நின்ற புராணனடியிணையேந்தும் நெடும்பயனும்
பொன்றுதலே நிலையென்றிடப் பொங்கும் பவக்கடலும்
நன்றிது தீயதிதென்று நவின்றவர் நல்லருளால்
வென்று புலன்களை வீடினைவேண்டும் பெரும்பயனே. 14
வேண்டும் பெரும்பயன் வீடென்றறிந்து விதிவகையால்
நீண்டுங்குறுகியும் நிற்கும் நிலைகளுக்கேற்குமன்பர்
மூண்டொன்றில் மூவினைமாற்றுதலில் முகுந்தடி©ண்டன்றி
மற்றோர் புகலொன்றிலையென நின்றனரே. 15
நின்றநிலைக்குற நிற்குங்கருமமும் நேர்மதியால்
நன்றென நாடிய ஞானமும் நல்குமுட்கண்ணுடையார்
ஒன்றியபத்தியும் ஒன்றுமிலாவிரைவார்க்கு அருளால்
அன்று பயன்தருமாறும் அறிந்தவரந்தணரே. 16
அந்தணரந்தியரெல்லையில் நின்ற அனைத்துலகும்
நொந்தவரே முதலாக நுடங்கியனன்னியராய்
வந்தடையும்வகை வன்தகவேந்தி வருந்திய
நம்அந்திமிலாதியை அன்பரறிந்தறிவித்தனரே. 17
அறிவித்தனரன்பர் ஐயம்பறையுமுபாயமில்லாத்
துறவித்துனியில் துணையாம் பரனை வரிக்கும்வகை
உறவித்னையின்றி ஒத்தாரெனநின்ற உம்பரைநாம்
பிறவித்துயர்செகுப்பீரென்று இரக்கும் பிழையறவே. 18
அறவேபரமென்று அடைக்கலம்வைத்தனர் அன்றுநம்மை
பெறவேகருதிப் பெருந்தகவுற்ற பிரானடிக்கீழ்
உறவேயிவனுயிர் காக்கின்ற ஓருயிருண்மையை நீ
மறவேலென நம்மறைமுடி சூடியமன்னவரே. 19
மன்னவர் விண்ணவர் வானோரிறையொன்றும் வான்கருத்தோர்
அன்னவர் வேள்வியனைத்தும் முடித்தனர் அன்புடையார்க்கு
என்னவரந்தரவென்ற நம்மத்திகிரித் திருமால்
முன்னம்வருந்தி அடைக்கலங்கொண்ட நம்முக்கியரே 20
முக்கியமந்திரங்காட்டிய மூன்றில் நிலையுடையார்
தக்கவையன்றித் தகாதவையொன்றுந் தமக்கிசையார்
இக்கருமங்கள் எமக்குளவென்னுமிலக்கணத்தால்
மிக்கவுணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே. 21
விண்ணவர்வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம்
மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர் வண்துவரைக்
கண்ணனடைக்கலங்கொள்ளக் கடன்கள் கழற்றிய நம்-
பண்ணமருந் தமிழ்வேதம் அறிந்த பகவர்களே. 22
வேதமறிந்த பகவர்வியக்க விளங்கியசீர்
நாதன் வகுத்த வகைபெறுநாம் அவன் நல்லடியார்க்கு
ஆதரமிக்க அடிமையிசைந்து அழயாமறைநு}ல்
நீதிநிறுத்த நிலைகுலையாவகை நின்றனமே. 23
நின்றனமன்புடைவானோர் நிலையில் நிலமளந்தான்
நன்றிது தீயதிதென்று நடத்திய நான்;மறையால்
இன்று நமக்கிரவாதலின் இம்மதியின் நிலவேயன்றி
அடிக்கடி ஆரிருள் தீர்க்கஅடியுளதே. 24
உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த
வளர்தாமரையிணை வண்சரணாகவரித்தவர்தாம்
களைதானெவெழும் கன்மந்துறப்பர் துறந்திடிலும்;
இளைதாநிலைசெக எங்கள் பிரானருள் தேனெழுமே. 25
ழூதேனார்கமலத் திருமகள் நாதன் திகழ்ந்துறையும்
வானாடுகந்த்வர் வையத்திருப்பிடம் வன்தருமக்
கானாரிமையமும் கங்கையும் காவிரியுங் கடலும்
நானாநகரமும் நாகமுங்கூடிய நன்னிலமே. 26
நன்னிலமாமது நற்பகலாமது நன்னிமத்தம்
என்னலுமாமது யாதானுமாமங்கடியவர்க்கு
மின்னிலைமேனி விடும்பயணத்து விலக்கிலதோர்
நன்னிலையாம் நடுநாடி வழிக்கு நடைபெறவே. 27
நடைபெற அங்கிப்பகல்ஒளிநாள் உத்தராயணமாண்டு
இடைவருகாற்றிரவி இரவின்பதி மின்வருணன்
குடையுடைவானவர்கோன் பிரசாபதி என்றிவரால்
இடையிடை போகங்களெய்தி எழிற்பதமேறுவரே. 28
ஏறியெழிற்பதம் எல்லாவுயிர்க்குமிதமுகக்கும்
நாறுதுழாய்முடி நாதனை நண்ணி அடிமையில்
நங்கூறுகவர்ந்த குருக்கள் குழாங்கள் குரைகழற்கீழ்
மாறுதலின்றி மகிழ்தெழும்போகத்து மன்னுவமே 29
மன்னும் அனைத்துறவாய் மருள்மாற்றருளாழியுமாய்த்
தன்நினைவால் அனைத்தும் தரித்தோங்கும் தனியிறையாய்
இன்னமுத்தமுதால் இரங்கும் திருநாரணனே
மன்னியவண்சரண் மற்றோர் பற்றின்றிவரிப்பவர்க்கே. 30
வரிக்கின்றனன் பரன் யாவரையென்று மறையதனில்
விரிக்கின்றதும் குறியொன்றால் வினையரயாதலின் நாம்
உரைக்கின்ற நன்னெறி ஓரும்படிகளிலோர்ந்து உலகம்
தரிக்கின்ற தாரகனார் தகவால் தரிக்கின்றனமே. 31
தகவால்தரிக்கின்ற தன்னடியார்களைத் தன்திறத்தில்
மிகவாதரஞ்செய்யும் மெய்யருள்வித்தகன் மெய்யுரையின்
அகவாயறிந்தவர் ஆரணநீதிநெறிகுலைதல் உகவாரென
எங்கள் தேசிகருண்மையுரைத்தனரே. 32
உண்மையுரைக்குமறைகளில் ஓங்கியவுத்தமனார்
வண்மையளப்பரிதாதலின் வந்து கழல்பணிவார்
தண்மைகிடக்கத் தரமளவென்றவியப்பிலதாம்
உண்மையுரைத்தனர் ஓரந்தவிரவுயர்ந்தனரே. 33
உயர்ந்தனன் காவலனல்லார்க்கு உரிமைதுறந்துயிராய்
மயர்ந்தமைதீர்ந்து மற்றோர் வழியின்றியடைக்கலமாய்
பயந்தவன் நாரணன் பாதங்கள் சேர்ந்து பழவடியார்
நயந்தகுற்றேவலெல்லாம்நாடும் நன்மனுவோதினமே 34
ஓதுமிரண்டையிசைத்து அருளாலுதவுந்திருமால்
பாதமிரண்டும் சரணெனப்பற்றி நம்பங்கயத்தாள்
நாதனைநண்ணி நலந்திகழ்நாட்டிலடிமையெல்லாம் கோதிலுணர்த்தியுடன் கொள்ளுமாறு குறித்தனமே. 35
குறிப்புடன்மேவும் தருமங்களின்றி அக்கோவனார்
வெறித்துளவக்கழல் மெய்யரணென்று விரைந்தடைந்து
பிரித்தவினைத்திரள் பின்தொடராவகை அப்பெரியோர்
மறிப்புடை மன்னருள் வாசகத்தால் மருளற்றனமே. 36
மருளற்ற தேசிகர் வானுகப்பால் இந்த வையமெல்லாம்
இருளற்று இறைவனிணையடி ©ண்டுயவெண்ணுதலால்
தெருளற்றசெந்தொழிற்செல்வம்பெருக்கிச் சிறந்தவர்பால்
அருளுற்றசிந்தையினால் அழியாவிளக்கேற்றினரே. 37
ஏற்றிமனத்தெழில் ஞானவிளக்கை இருளனைத்தும்
மாற்றினவர்க்கு ஒருகைம்மாறு மாயனுங்காணகில்லான்
போற்றியுகப்பதும் புந்தியில்கொள்வதும் பொங்குபுகழ்
சாற்றிவளர்ப்பதும் சற்றல்லவோமுன்னம்பெற்றதற்கே.38
முன்பெற்றஞானமும் மோகந்துறக்கலும் மூன்றுரையில்
தன்பற்றதன்மையும் தாழ்ந்தவாக்கீயும் தனித்தகவும்
மன்பற்றிநின்றவகை உரைக்கின்ற மறையவர்பால்
சின்பற்றிஎன்பயன் சீரறிவோர்க்கிவைசெப்பினமே. 39
ழூசெப்பச்செவிக்கமுதென்னத்திகழும் செழுங்குணத்துத்
தப்பற்றவருக்குத் தாமேயுகந்து தருந்தகவால்
ஒப்பற்ற நான்மறை உள்ளக்கருத்தில் உறைத்துரைத்த
முப்பத்திரண்டிவை முத்தமிழ்சேர்ந்தமொழித்திருவே. 40
திருவுடன் வந்த செழுமணிபோல் திருமாலிதயம்
மருவிடமென்ன மலரடிசூடுவகைபெறுநாம்
கருவுடன்வந்த கடுவினையாற்றில் விழுந்தொழுகாது
அருவுடனைந்தறிவார் அருள்செய்ய அமைந்தனரே.
ழூபுருடன்மணிவரமாகப் பொன்றாமூலப்
பிரகிருதிமறுவாக மான்தண்டாகத்
தெருள்மருள்வாளுறையாக ஆங்காரங்கள்
சார்ங்கஞ்சங்காக மனந்திகிரியாக
இருடிகங்களீரைந்துஞ்சரங்களாக
இரு©தமாலை வனமாலையாக
கருடனுருவாம் மறையின்பொருளாம் கண்ணன்
கரிகிரிமேல் நின்று அனைத்துங்காக்கின்றானே 41
ழூஆராதவருளமுதம் பொதிந்தகோயில்
அம்புயத்தோன் அயோத்திமன்னற்களித்தகோயில்
தோலாத தனிவீரன் தொழுதகோயில்
துணையானவீடணற்குத் துணையாங்கோயில்
சோராதபயனெல்லாஞ்சேர்க்குங்கோயில்
செழுமறையின் முதலெழுத்துச் சோந்தகோயில்
தீராதவினையனைத்தும் தீர்க்குங்கோயில்
திருவரங்கமெனத்திகழும் கோயில்தானே. 42
ழூஉத்தமவ்அமர்த்தலமைத்த
தோரெழிற்றனுவினுய்த்தகணையால்
அத்திரவரக்கன் முடிபத்துமொருகொத்தென
உதிர்த்ததிறலோன்
மத்துறுமிகுத்த தயிர்மொய்த்தவெணெய்
வைத்துணும் அத்தனிடமாம்
அத்திகிரிபத்தர்வினைதொத்தற
வறுக்குமணியத்திகிரியே. 44
எட்டுமாமூர்த்தியெண்கணன்
எண்டிக்கெட்டிறையெண்பிரகிருதி
எட்டுமாவரைகளீன்றவெண்குணத்தோன்
எட்டெணுமெண்குணமதியோர்க்கு
எட்டுமாமாமலரெண்சித்தியெண்பத்தி
எட்டியோகாங்கமெண்செல்வம்
எட்டுமாகுணமெட்டெட்டெணுங்கலை
எட்டிரதமேலதுவுமெட்டினவே. 45
ஒண்டொடியாள் திருமகளுந்தானுமாகி
ஒருநினைவாலீன்ற உயிரெல்லாம் உய்ய
வண்டுவரைநகர்வாழு வசுதேவர்க்காய்
மன்னவற்குத் தேர்ப்பாகனாகிநின்ற
தண்டுளவமலர்மார்பன் தானே சொன்ன
தனித்தருமந்தானெமக்காய்த் தன்னையென்றுங்
கண்டுகளித்தடிசூட விலக்காய்நின்ற
கண்புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே. 46
மூண்டாலுமரியதனின் முயலவேண்டா
முன்னமதில் ஆசைதன்னை விடுகைதிண்மை
வேண்டாது சரணநெறி வேறோர்கூட்டு
வேண்டிலயனத்திரம்போல் வெள்கிநிற்கும்
நீண்டாகு நிறைமதியோர் நெறியிற்கூடா
நின்தனிமைதுணையாகவெந்தன் பாதம்©ண்டால்
உன்பிழைகளெல்லாம் பொறுப்பேனென்ற
புண்ணியனார் புகழனைத்தும் புகழுவோமே. 47
சாதனமும் நற்பயனும் நானேயாவன்
சாதககனுமென்வயமாம் என்னைப்பற்றும்
சாதமுஞ்சரணநெறி அன்றுனக்குச்
சாதனங்கள் இந்நிலைக்கோர் இடையினில்லா
வேதனைசேர்வேறங்கம் இதனில்வேண்டா
வேறெல்லாம் நிற்குநிலைநானேநிற்பன்
து}தனுமாம் நாதனுமாம் என்னைப்பற்றிச்
சோகந்தீரெனவுரைத்தான் சூழ்கின்றானே. 48
தன்னினைவில்விலக்கின்றித் தன்னைநண்ணார்
நினைவனைத்துந் தான்விளைத்தும் விலக்குநாதன்
எந்நினைவையிப்பவத்தில் இன்றுமர்றி
இணையடிக்கீழடைக்கலமென்றெம்மைவைத்து
முன்நினைவால் யாம்முயன்ற வினையால் வந்த
முனிவயர்ந்து முத்திதர முன்னேதோன்றி
நன்னினைவால் நாமிசையுங்காலம் இன்றோ
நாளையோ ஓவென்று நகைக்கின்றானே. 49
ழூபாட்டுக்குறிய பழையவர்மூவரைப் பண்டொருகால்
மாட்டுக்கருள்தரு மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கிருள்செக நான்மறையந்தி நடைவிளங்க
வீட்டுக்கிடைகழிக்கே வெளிகாட்டுமம்மெய்விளக்கே 50
ழூஉறுசகடமுடையவொருகாலுற்றுணர்ந்தன
உடன்மருதமொடியவொருபோதிற்தவழ்ந்தன
உறிதடவுமளவிலுரலோடுற்றுநின்றன
உறுநெறியொர்தருமன்விடு து}துக்குகந்தன
மறநெறியர்முறியபிருதானத்துவந்தன
மலர்மகள் கைவருடமலர்போதிற்சிவந்தன
மறுபிறவியறுமுனிவர் மாலுக்கிசைந்தன
மனுமுறையில்வருவதோர்விமானத்துறைந்தன
அறமுடையவிசயனமர் தேரிற்றிகழ்ந்தன
அடலுரகபடமடிய வாடிக்கடிந்தன
அறுசமயமறிவரிய தானத்தமர்ந்தன
அணிகுருகைநகர் முனிவர் நாவுக்கமைந்தன
வெறியுடைய துளவமலர் வீறுக்கணிந்தன
விழுகரியொர்குமரனென மேவிச்சிறந்தன
விறலசுரர்படையடைய வீயத்துரந்தன
விடலரிய பெரியபெருமாள் மென்பதங்களே. 51
மறையுறைக்கும் பொருளெல்லாம் மெய்யென்றோர்வார்
மன்னியகூர்மதியுடையார் வண்குணத்திற்
குறையுரைக்க நினைவில்லார் குருக்கள் தம்பால்
கோதற்றமனம்பெற்றார்கொள்வார் நன்மை
சிறைவளர்க்குஞ்சிலமாந்தர் சங்கேதத்தால்
சிதையாத திதிண்மதியோர் தெரிந்ததோரார்
பொறைநிலத்தின் மிகும்புனிதர் காட்டும் எங்கள்
பொன்றாத நன்னெறியிற் புகுதுவாரே.
இதுவழியின்னமுதென்றவர் இன்புலன்வேறிடுவார்
இதுவழியாமலவென்றறிவார் எங்கள்தேசிகரே
இதுவழிஎய்துகவென்று உகப்பாலெம்பிழைபொறுப்பார்
இதுவழியாமறையோரருளால் யாமிசைந்தனமே. 53
எட்டுமிரண்டும் அறியாதவெம்மை இவையறிவித்து
எட்டவொண்ணாதவிடந்தரும் எங்களம்மாதவனார்
முட்டவினைத்திரள்மாள முயன்றிடுமஞ்சலென்றார்
கட்டெழில்வாசகத்தால் கலங்காநிலைபெற்றனமே. 54
ழூவானுளமர்ந்தவருக்கும் வருந்தவருநிலைகள்
தானுளனாயுகக்கும் தரம் இங்குநமக்குளதே
கூனுளநெஞ்சுகளால் குற்றமென்றிகழ்ந்திடினும்
தேனுளபாதமலர் திருமாலுக்குத் தித்திக்குமே. 55
ழூவெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம்
உள்ளத்தெழுதியது ஓலையிலிட்டனம் யாமிதற்கென்
கொள்ளத்துணியினும் கோதென்றிகழினும் கூர்மதியீர்
எள்ளத்தனையுகவாது இகழாதெம் எழில்மதியே. 56.
அடிவரவு:- பொய்கை, இன்பத்தில், என்னுயிர், ஆரணநு}ல், வந்து, காளம், ஆளுமடை, திருவுடன், --
திருவுடன், புருடன், ஆராதவருள், கண்ணனடி, உத்தம, எட்டுமா, ஒண்டொடி, மூண்டாலும், சாதனமும், தன்நினைவில்-
தன்நினைவில், பாட்டுக்கு, உறுசகடம், மறையுரை, இதுவழி,
எட்டுமிரண்டு, வானுள், வெள்ளை.
ப்ரபந்தஸாரம்
தனியன்கள்
ஆரணநான்கின்பொருளை யாழ்வார்களாய்ந்தடைவே
யன்புடனேயம்புவியோ ரனைவருமீடேறவென்று
நாரணனார்தாள்களிலே நாலாயிரந்தமிழால்
நண்ணியுரைசெய்தவற்றை நாடிவகைதொகைசெய்தாய்
பூரணமாஞானியர்சேர் பொங்குபுகழ்த்தூப்புல்வரும்
புனிதனென்றும்பிள்ளையென்றும் புவியோர்புகழ்வேங்கடவா!
தாரணியோரிங்குகக்கச் சாற்றியநற்ப்பரபந்தசாரந்
தனியுரைத்துவாழுமனந் தந்தருளாயென்தனக்கே. 1
ஆதிமறையோதிமகி ழயக்கிரீவர் தம்மருளால்
அன்புடனேதூப்புல்நக ரவதரித்திங்குவந்து
வாதியரைவென்றுவந்து வண்புவிமேலெதிராசர்
வாழ்வுறுநற்றரிசனத்தை வன்மையுடனேவளர்த்து
நீதிநெறிதலறாமல் நிறுத்தியிடும்வேங்கடவா!
நேசமுடனாழ்வார்கள் நிலைகளெல்லாமுணர்ந்து
சாதுசனம்வாழசென்று சாற்றியநற்ப்ரந்தசாரந்
தனையுரைத்துவாழ மனந்தந்தருளாயென்தனக்கே. 2
ஆழ்வார்களவதரித்த நா@ர்திங்கள்
அடைவுதிருநாமங்க ளவர்தாஞ்செய்த
வாழ்வான திருமொழிக ளவற்றுட்பாட்டின்
வகையான தொகையிலக்க மற்றுமெல்லாம்
வீழ்வாகமேதினிமேல் விளங்கநாளும்
விரித்துரைக்கும் கருத்துடனே மிக்கோர்தங்கள்
நீள்பாதநிரந்தரமுந் தொழுதுவாழ்த்தும்
நேசமுடனடியேன் தன் நெஞ்சுதானே. 1
அருள்மிகுத்ததொருவடியாய்க் கச்சிதன்னில்
ஐப்பசிமாதத் திருவோணத்திருநாளில்
பொருண்மிகுத் தமறைவிளங்கப் புவியோருய்யப்
பொய்கை தனில்வந்துதித்த புனிதா! முன்னாள்
இருள தனில் தண்கோவ லிடைகழிச்சென்று
இருவருடன்நிற்கவும் மாலிடைநெருக்க
திருவிளக்காமென வையந்தகளிநூறாஞ்
செழும்பொருளை யெனக்கருள் செய்திருந்தநீயே. 2
கடன் மல்லைக் காவலனே! பூதவேந்தே!
காசினிமேலைப்பசியி லவிட்டநாள்வந்து
இடர் கடியுந்தண்கோவ லிடைக்கழிச்சென்று
இணையில்லாமூவருமா யிசைந்தேநிற்க
நடுவிலுமிலொருவரு மன்றறியாவண்ணம்
நள்ளிருளில் மால்நெறக்க நந்தாஞானச்
சுடர்விளக்கேற்றிய அன்பேதகளியான
தொடைநூறு மெனக்குருள் செய்துலங்க நீயே. 3
மாமயிலைப்பதியதனின் துலாமாதத்தில்
வருஞ்சதயத் தவதரித்துக்கோவலூரில்
தூமுனிவரிருவருடன் துலங்கநின்று
துன்னியபேரிருள்நீங்கச் சோதிதோன்ற
சேமமுடனெடுமாலைக் காணப்புக்குத்
திருக்கண்டேனெனவுரைத்த தேவே! உன்தன்
பாமருவுதமிழ்மாலை நூறுபாட்டும்
பழவடியேனுக் கருள்செய்பரம! நீயே. 4
தைம்மகத்தில்வரு மழிசைப்பானே! மற்றைச்
சமயங்கள்பலதெரிந்து மாயோனல்லால்
தெய்வம்மற்றில்லையென வுரைத்தவேதச்
செழும்பொருள்நான்முகன் தொண்ணுhற்றாறுபாட்டும்
மெய்ம்மிகுத்த திருச்சந்தவிருத்தப்பாடல்
விளங்கியநூற்றிருபதுந் தப்பாமல்மெய்யே
வையகத்தில்மறவாம லுரைத்துவாழும்
வகையடியேனுக் கருள்செய்மகிழ்ந்துநீயே. 5
ழூமுன்னுரைத்ததிருவிருத்தம் நுறுபாட்டும்
முறையின்வருமாசிரிய மேழுபாட்டும்
மன்னியநற்பொருள் பெரிய திருவந்தாதி
மறவாதபடி யெண்பத்தேழுபாட்டும்
பின்னுரைத்ததோர் திருவாய்மொழியெப்போதும்
விழையறவாயிரத்தொருநூற்றிரண்டுபாட்டும்
இந்நிலத்தில்வைகாசி விசாகந்தன்னி
லெழிற்குருகைவரு மாறா இரங்குநீயே. 6
தேறியமாஞானமுடன் திருக்கோ@ரில்
சித்திரையிற்சித்திரைநாள் வந்துதோன்றி
ஆறியநல்லன்புடனே குருகூர்நம்பிக்கு
அனவரதம் அந்தரங்கவடிமைசெய்து
மாறனையல்லாலென்று மறந்துந்தேவு
மற்றறியேனெனு மதுரகவியே! நீமுன்
கூறியகண்ணிநுண்சிறுத்தாம்பதனிற்பாட்டுக்
குலவுபதினொன்று மெனக்குதவுநீயே 7
பொன்புறையும் வேற்குலசேகரனே! மாசிப்
புனர்பூசத்தெழில் வஞ்சிக்களத்தில் தோன்றி
அன்புடனேநம்பெருமாள் செம்பொற்கோயி
லனைத்துலகின் பெருவாழ்வுமடியார் தங்கள்
இன்பமிகுபெருங்கு--உக் காணமண்மேல்
இருளிரியவென்றெடுத்த விசையிற்சொன்ன
நன்பொருள் சேர்திருமொழி நூந்றைந்துபாட்டும்
நன்றாகவெனக்கருள்செய் நல்கி நீயே. 8
பேரணிந்த வில்லிபுத்து}ர் ஆனிதன்னில்
பெருஞ்சோதிதனில் தோன்றும் பெருமானே முன்
சீரணிந்த பாண்டியன் தன் நெஞ்சுதன்னில்;
துயக்கரமால் பரத்துவத்தைத் திரமாய்ச்செப்பி
வாரணமேல் மதுரைவலம்வரவே வானில்
மால்கருடவாகனாய்த் தோன்றவாழ்த்தும்
ஏரணிபல்லாண்டு முதற்பாட:டு நானு}ற்
றெழுபத்தொன்றிரண்டும் எனக்குதவு நீயே 9
வேயர்புகழ் வில்லிபுத்து}ர் ஆடிப்©ரம்
மேன்மேலும் மிகவிளங்க விட்டுசித்தன்
து}யதிருமகளாய் வந்தரங்கனார்க்குத்
துழாய்மாலை முடிசூடிக்கொடுத்த மாதே
நேயமுடன் திருப்பாவைப் பாட்டாறைந்தும்
நீயுரைத்த தையொருதிங்கட்பாமாலை
ஆயபுகழ் நு}ற்று நாற்பத்து மூன்றும்
அன்புடனேயடியேனுக்கருள்செய் நீயே. 10
மன்னுமதிள் திருமண்டங்குடிதான் வாழ
மார்கழிமாதத்துக் கேட்டைநாளில் வந்து
துன்னுபுகழ்த் தொண்டரடிப்பொடியே நீ முன்
துழாய்மாலைப் பணியடிமை செய்து நாறும்
தென்னரங்க மணவாளர்க் கன்புமிக்குச்
செப்பிய நற்றிருமாலை நாற்பத்தைந்தும்
பன்னிய நற்றிருப்பள்ளியெழுச்சிப் பத்தும்
பழவடியேனுக் கருள்செய் பரிந்து நீயே. 11
உலகறிய மலிபுகழ்க் காத்திகை மாதத்தில்
உரோகிணிநாளுரைந்தை வளம்பதியில் தோன்றி
தலமளந்த தென்னரங்கர்பால் உலோக
சாராங்க மாமுனி தோள்தனிலே வந்து
பலமறையின் பொருளாற் பான்பெருமாளே நீ
பாதாதிகேசமதாய்ப் பாடித் தந்த
சொல்அமலனாதிபிரான் பத்துப்பாட்டுஞ்
சோராமல் எனக்கருள்செய் துலங்க நீயே. 12
ழூஅறிவுதரும் பெரிய திருமொழி தப்பாமல்
ஆயிரத்தோடெண்பத்து நாலுபாட்டும்
குறியதொரு தாண்டகம் நாலைந்தாறைந்தும்
குலாநெடுந்தாண்டகம் எழுகூற்றிருக்கை ஒன்றும்
சிறியமடற் பாட்டு முப்பத்தெட்டிரண்டும்
சீர்பெரிய மடல்தனில் பாட்டெழுபத்தெட்டும்
இறையவனே கார்த்திகையில் கார்த்திகைநாள்
எழில்குறையல் வருங் கலியா இரங்கு நீயே. 13
தேசமெல்லாம் உகந்திடவே பெரும்©து}ரில்
சித்திரையில் ஆதிரைநாள் வந்து தோன்றி
காசினிமேல் வாதியரைவென்று அரங்கர்க்
கதியாக வாழ்ந்தருளும் எதிராசா முன்
©சுரர்கோன் திருவரங்கத்தமுதனார் உன்
பொன்னடிமேல்; அந்தாதியாகப் போற்றிப்
பேசிய நற்கலித்துறை நு}ற்றெட்டுப் பாட்டும்
பிழையறவே எனக்கருள்செய் பேணி நீயே. 15
எண்ணில் முதலாழ்வார்கள் மூன்றுநு}றும்
எழின்மழிசைப் பிரானிருநு}ற்றொருபத்தாறும்
உண்மைமிகு மாறன் மறையாயிரத்தோடுற்ற
இருநு}ற்றுத் தொண்ணு}றும் ஆறும்
வண்மையுடை மதுரகவி பத்துமொன்றும்
வஞ்சியர்கோன் நு}ற்றைந்தும் பட்டநாதன்
பண்ணியநாற்றேழுபத்து மூன்றும்
பார்க்கோதை நு}ற்றெழுபத்து மூன்றே. 16
பத்தரடிப்பொடி பாடலைம்பத்தைந்தும்
பாணர்புகழ் பத்துடனே பரகாலன் சொல்
அத்தனுயர் வேங்கடமாற்காயிரத்தோடான
இருநு}ந்றோரைம்பத்து மூன்றும்
முத்திதரும் எதிராசர் பொன்னடிக்கே
மொழிந்த அமுதர்பாடல் நு}றுமெட்டும்
எத்திசையும் வாழ இவைபாடிவைத்தவென்பவை
நாலாயிரமும் எங்கள் வாழ்வே. 16
வையகமெண் பொய்கை ©தன் பேயாழ்வார்
மழிசையர்கோன் மகிழ்மாறன் மதுரகவி
பொய்யில்புகழ்க் கோழியர்கோன் விட்டுசித்தன்
©ங்கோதை தொண்டரடிப்பொடி பாணாழ்வார்
ஐயனிருட்கலியன் எதிராசர்தம்மோடு
ஆறிருவரோரொருவரவர்தாஞ்செய்த
துய்யதமிழிருபத்து நான்;கிற்பாட்டின்
தொகை நாலாயிரமும் அடியோங்கள் வாழ்வே 17
அந்தமிலா வாரணங்கள் நாலாய் நின்ற
அதன் கருத்தை யாழ்வார்கள் ஆய்ந்தெடுத்து
செந்தமிழால் அருள்செய்த வகை தொகையுஞ்
சிந்தாமலுகங்கள் வாழவென்று
சந்தமிகு தமிழ்மறையோன் து}ப்புல்தோன்றும்
வேதாந்தகுரு மொழிந்த ப்ரபந்தசாரம்
சிந்தையினால் அனுதினமும் சிந்திப்போர்க்குச்
சேமமதாம் திருமால்தன் கருணையாலே. 18
அடிவரவு:- ஆழ்வார்கள், அருள், கடல், மாமயிலை, தை, முன், தேறிய, பொன், பேரணி, வேயர், மன்னு, உலகறிய, அறிவுதரும், தேசமெலாம், எண்ணில், பத்தரடிப்பொடி, வையகம், அந்தமிலா, ஆகாரம்.
நயினாராச்சாரியார் அருளிச்செய்த
பிள்ளையந்தாதி
தனியன்
சீரார் து}ப்புல் பிள்ளையந்தாதியென்று செழுந்தமிழால்
நேராக வேதாந்த தேசிகர் தாளிணைக்கீழ் மொழிந்தான்
ஏரார்மறைப்பொருளெல்லாம் எடுத்திவ்வுலகுய்யவே
சீராகிய வரதாரியன் பாதந் துணை நமக்கே.
ழூமாமலர் மன்னியமங்கை மகிழ்ந்துறைமார்பினன்தாள்
து}மலர் சூடியதொல்லருள் மாறன் துணையடிக்கீழ்
வாழ்வையுகக்கும் இராமாநுசமுனி வண்மைபோற்றும்
சீர்மையனெங்கள் து}ப்புற்பிள்ளை பாதமென்சென்னியதே 1
சென்னிவணங்கச் சிறுபனிசோரவெங்கண்ணிணைகள்
வெந்நரகங்களும் வீயவியன்கதியின்பமேவ
துன்னுபுகழுடைத் து}ப்புல் துரந்தரன் து}மலர்த்தாள்
மன்னிய நாள்களுமாகுங்கொல் மாநிலத்தீர் நமக்கே. 2
மாநிலத்தோதிய மாமறை மன்னிய நற்கலைகள்
ஆனவைசெப்புமரும்பொருள் அத்தனையே அருளும்
து}நெறிகாட்டும் இராமாநுசமுனி தோத்திரஞ்செய்
ஊனமில் து}ப்பலய்யன் ஓர்புகழின்றி உய்வில்லையே. 3
உய்யும் வகையில்லை உத்தரவேதியுள் வந்துதித்த
செய்யவள்மேவிய சீரருளாரைச் சிந்தைசெய்யும்
மெய்யவனெந்தை இராமாநுசனருள் மேவிவாழும்
ஐயனிலங்கு து}ப்புற்பிள்ளையாய்ந்த பொருளின்றியே. 4
அன்றிவ்வுலகினையாக்கி அரும்பொருள் நு}ல்விரித்து
நின்றுதன்னீள்புகழ் வேங்கடமாமலை மேவிப் பின்னும்
வென்றிப்புகழ்த் திருவேங்கடநாதனெனுங் குருவாய்
நின்றுநிகழ்ந்து மண்மேனின்ற நோய்கள் தவிர்தனனே. 5
வித்தகன் வேதியன் வேதாந்ததேசிகன் எங்கள் து}ப்புல்
மெய்த்தவன் உத்தமன் வேங்கடநாதன் வியன்கலைகள்
மொய்த்திடு நாவின் முழக்கொடு வாதியர் மூலமற
கற்றவனென்றுரைத்தேன் கண்டிலேனென் கடுவினையே 6
வினைகாள் உமக்கு இனிவேறோர் இடந்தேடவேண்டுமெனை
சினமேவி முன்போல் சிதைக்கும் வகைஇங்கரிதுகண்டீர்
எனிதிலிராமாநுசமுனி இன்னுரைசேர்ந்த து}ப்புல்
புனிதரென்புந்தி புகுந்து திகழ்ந்து பொருந்தினரே 7
பொருந்திப்புவிதனில் பொய்வாழ்க்கை ©ண்கின்ற ©ரியர்காள்
இருந்து நரகினிடர்கெடுமாற்ற மறிகின்றிலீர்
பொருந்தும் பொருளொன்று கேளீர் பொங்குமிவ்விடர்கடற்கு
வருந்தாது து}ப்புல் மா©ருடன் பாதம் வணங்குமினே. 8
வணக்கமொடுக்கம் வழக்கமொழுக்கமிரக்கஞ்சேரும்
இணக்கமுறக்கமிழுக்குமழுக்கு மிகந்துநிற்கும்
குணக்குலமோங்குமிராமாநுசன் குணங்கூறுந் து}ப்புல்
அணுக்கனைப் பிள்ளைதனை அரணாகவடைபவர்க்கே 9
அடைபவர் தீவினைமாற்றி அருள்தரும் து}ப்புலையா
இடர்தருமிப்பிறவிக்டல்தன்னில் அமிழ்ந்தவென்னை
கடையறப்பாசங்கழற்றி நின்தாளிணை காணும்வண்ணம்
உடையவனே அருளாய் உணர்ந்தார்தங்கள் கற்பகமே. 10
கற்பகமேயென்று காசினியோரைக் கதிக்கமாட்டேன்
வெற்பிடையேநின்று வெந்தவத்தீயிலும் வேவமாட்டேன்
பற்பல்கலைவல்ல பாவலனே பத்தரேத்துந் து}ப்புல்
அற்புதனே அருளாய் அடியேனுக்கரும்பொருளே. 11
பொருளானதொன்றுமென்னிற் பொருந்தாததுவன்றியந்தோ
மருளேமிகுத்து மறையவர் நல்வழி மாற்றிநின்றேன்
தெருளார்மறைமுடித் தேசிகனே எங்கள் து}ப்புல்தேவே
அருளாயினியெனக்குன்னருளேயன்றியாறில்லையே. 12
ஆறாகவெண்ணும் அருங்கருமம் ஞானங்காதல்கொண்டு
வேறாகநிற்கும்விரகெனக்கில்லை விரத்தியில்லை
தேறாது திண்மதி சீரார் கதியிலுஞ் செம்பொன்மேனி
மாறாத து}ப்புல்மாலே மறவேனினி நின்பதமே 13
நின்பதந்தன்னிலும் நேரேஎனக்கில்லையன்புகண்டாய்
நின்பதமொன்றியவன்பரிலும் நேமில்லையந்தோ
என்படிகண்டினியென்பயன் ஏதமில்து}ப்புலெந்தாய்
உன்படியேயருளாலுதவாய் எனக்குன்னருளே. 14
உன்னருளன்றி எனக்கொரு நற்றுணையின்மையினால்
என்னிருவல்வினை நீயே விலக்கியிதங்கருதி
மன்னிய நற்றிருமந்திரமோதும் பொருள்நிலையே
பொன்னருளாலருளாய் புகழ்த்து}ப்புல் குலவிளக்கே 15
விளக்காகி வேங்கடவெற்பினில் வாழும் விரைமலராள்
வளக்காதல்கொண்டுறைமார்பன் திறத்துமுனதடியார்
துளக்காதலில்லவர்தங்கள் திறத்திலுந் து}ய்மையெண்ணி
களக்க்hதல் செய்யுநிலை கடியாய் து}ப்புற் காவலனே. 16
காவலரெங்கள் கிடாம்பிக் குலபதியப்புளார்தம்
தேமலர்ச் சேவடி சேர்ந்து பணிந்தவர்தம்மருளால்
நாவலருந் தென்வடமொழி நற்பொருள் பெற்ற நம்பி
காவல து}ப்புற் குலத்தரசே எம்மைக் காத்தருளே. 17
அருள்தரும் ஆரணதேசிகனே எங்கள் து}ப்புல்தேவே
வருகவிதார்க்கிக சிங்கமே வாதியர் வாழ்வருத்தாய்
இருகையுங்கூப்பியரைக்கும் இவ்விண்ணப்பமொன்றுகேளாய்
உருவவெனக்கருளாய் எண்ணுமுள்ளமுன்தொண்டரையே. 18
தொண்டருகக்குந் துணையடிவாழி நின்து}முறுவல்
கொண்டமுகம்வாழி வாழி வியாக்கியாமுத்திரைக்கை
வண்திருநாமமும்; வாழி மணிவடமுப்புரிநு}ல்
கொண்டசீர்த் து}ப்புல் குலமணியே வாழி நின்வடிவே. 19
வடிவழகார்ந்த வண்து}ப்புல் வள்ளல் மென்மலரடிமேல்
அடியவரோதவந்தாதி இருபதும் ஆய்ந்துரைத்தேன்
திடமுடனீதைத் தினந்தோறும் ஆதரித்தோதுமன்பர்
முடியிடைநேர்படும் து}ப்புல்அம்மான் பதமாமலரே. 20
சீரார் து}ப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.